
'ஹாரி பாட்டர்' சீரிஸ் தயாரிப்பைத் தொடங்கியது HBO: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி பாட்டரின் தொடர் தழுவல், லீவ்ஸ்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது. ஷூட்டிங் தொடங்கியதை குறிக்கும் வகையில் முதல் புகைப்பபடம் திங்கட்கிழமை (உள்ளூர் நேரம்) பகிரப்பட்டது. இதில் டொமினிக் மெக்லாலின் என்ற குழந்தை நடிகர் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த இளம் நடிகர் ஹாரி பாட்டரின் சின்னமான வட்டக் கண்ணாடிகள் மற்றும் ஹாக்வார்ட்ஸ் சீருடையை அணிந்து சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவருடன் ஹெர்மியோன் கிரேஞ்சராக அரபெல்லா ஸ்டாண்டனும், ரான் வீஸ்லியாக அலஸ்டேர் ஸ்டவுட்டும் இணைவார்கள்.
புதுப்பிப்புகள்
புதிய நடிகர்களில் ரோரி வில்மோட், அமோஸ் கிட்சன்
இந்தத் தொடருக்கான புதிய நடிகர்களையும் தயாரிப்புக் குழு அறிவித்தது. ரோரி வில்மோட், லூயிஸ் ப்ரீலி, அமோஸ் கிட்சன் மற்றும் ஆண்டன் லெஸ்ஸர் ஆகியோர் முறையே நெவில் லாங்பாட்டம், மேடம் ரோலண்டா ஹூச், டட்லி டர்ஸ்லி மற்றும் கேரிக் ஆலிவண்டர் ஆகியோராக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் நடிகர்களான மெக்லாலின், ஸ்டாண்டன் மற்றும் ஸ்டவுட் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் நடந்த நடிகர் தேர்வின் போது 30,000க்கும் மேற்பட்ட நடிகர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This is the first official image of Dominic McLaughlin as Harry Potter for the upcoming series on HBO Max ⚡️ pic.twitter.com/IjAGAFWnwz
— Daily Harry Potter (@TheDailyHPotter) July 14, 2025
பிரீமியர் விவரங்கள்
2027 இல் திரையிடப்பட உள்ளது
ஹாரி பாட்டர் தொடர் 2027 ஆம் ஆண்டில் HBO மற்றும் அதன் ஸ்ட்ரீமிங் சேவையான HBO Max-இல் திரையிடப்பட உள்ளது. இந்த தொடரை தயாரிப்பாளர் பிரான்செஸ்கா கார்டினர் மற்றும் Succession புகழ் இயக்குனர் மார்க் மைலோட் ஆகியோர் முன்னெடுத்து செல்லவுள்ளனர். இந்த புதிய தொடர், புகழ் பெற்ற மந்திர உலகத்தையும், அதன் ஹீரோவான ஹாரி பாட்டரையும், அவர் படிப்படியாக தனது மாயாஜால சக்திகளைக் கண்டறிந்து, தன்னை துன்புறுத்திய உறவினர்களை விட்டு வெளியேறி, பிரபலமான ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் இணைவது குறித்து பேசும்.