மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா?
மலையாள திரையுலகின் 'மெகாஸ்டார்' நடிகர் மம்மூட்டி, கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற ஊரில், இஸ்மாயில்-பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முகமது குட்டி. இவர் சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு திரை துறையில் நுழைந்தார். பலரும் நினைப்பது போல், சினிமாவிற்காக இவர் பெயரை மாற்றி கொள்ளவில்லை. படிக்கும் காலத்திலேயே தனது பெயரை மாற்றிக்கொண்டாராம். சிறுவயதில் தனது இயற்பெயரான முகமது குட்டி பிடிக்காததால், தனது நண்பர்களிடம், தனது பெயர் ஓமர் என்றும் ஷெரிப் என்றும் கூறியுள்ளார். வெகு நாட்களாக அதுதான் அவர் பெயர் என பலரும் நம்பி கொண்டிருக்க, ஒரு நாள், அவரது பள்ளி அடையாள அட்டை கீழே தவறி விழ, அது அவர் நண்பரின் கையில் கிடைத்ததாம்.
3 தேசிய விருதுகள், 7 கேரள மாநில விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள்!
மம்மூட்டி தவறவிட்ட ID கார்டு மூலமாக, அவரின் நண்பர்களுக்கு இவரின் உண்மையான பெயர் தெரிய வந்ததாம். உடனே, முகமது குட்டி என்ற பெயரை சுருக்கி, ஒரு நண்பர் கிண்டலாக கூறவும், அப்படியே மாற்ற நண்பர்களும் அதையே பின்பற்ற துவங்கினராம். இப்படிதான் முகமது குட்டி, மம்மூட்டி ஆனார். தற்போது மலையாள திரையுலகினர் அனைவரும் அவரை, 'மம்மூக்கா' என அழைக்கின்றனர். மம்மூட்டி இது வரை, 400 க்கும் மேற்பட்ட படங்களும், அதற்காக, 3 தேசிய விருதுகள், 7 கேரள மாநில விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். இன்று மம்மூட்டி தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.