
பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகர் அரவிந்த்சுவாமி நடிப்பில் ஹிட் ஆன படங்கள்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் 'எவர்கிரீன் சாக்லேட் பாய்' என்றால், அது அரவிந்த்சுவாமி தான்.
90'களில் பலரும் அரவிந்த்சுவாமி போல மாப்பிளை வேண்டும் என கூறிய காலம் உண்டு. ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது ஸ்டைலிஷ் வில்லனாக வலம் வரும் அரவிந்த்சுவாமி இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரின் நடிப்பில் வெளியான சில சூப்பர்ஹிட் படங்களின் பட்டியல் இதோ:
தளபதி: ரஜினி-மம்மூட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அரவிந்த்சுவாமியின் வேடமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் படத்திலேயே சம்பவங்களுடன் போட்டிபோட்டு நடித்திருந்தார். அழகான, கம்பீரமான கலெக்டர் வேடத்தில் அவர் பொருந்தி இருப்பார்.
ரோஜா: இந்த படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பான்-இந்தியா படமாக வெளியாகி, பல விருதுகளை வென்றது இந்த திரைப்படம். அதில் தேசிய விருதும் அடக்கம்.
card 2
லவ்வர்பாய், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் மிளிரும் அரவிந்த்சுவாமி
பம்பாய்: காதல், ஆதங்கம், ரௌத்திரம் என பல உணர்ச்சிகளை மிகையில்லாமல் வெளிப்படுத்தி இருப்பார். படத்தின் பாடல்கள் இன்றும் சூப்பர் ஹிட்.
தனி ஒருவன்: ஹீரோவாக மட்டுமில்லாமல், வில்லனாகவும் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்து காட்டிய படம். ஸ்டைலிஷ் வில்லனாக, ஆர்பாட்டமில்லாத, அழுத்தமான வசன உச்சரிப்பு மூலம் மனதை கவர்ந்தார்.
செக்கச்சிவந்த வானம்: மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என மறுபடியும் நிரூபித்தார். சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி என இளம் தலைமுறை நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்திருந்தார்
தலைவி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், MGRஆக நடித்திருந்தார். பொன்மனச்செம்மலின் உடல்மொழியை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருப்பார்