Page Loader
நண்பர்கள் தினம்: திரையுலகின் முன்னோடிகளான சிவாஜி-MGR நட்பு
சிவாஜி கணேசன் -MGR நட்பு

நண்பர்கள் தினம்: திரையுலகின் முன்னோடிகளான சிவாஜி-MGR நட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 31, 2023
05:14 pm

செய்தி முன்னோட்டம்

நம் வாழ்வின் முக்கியமாக பகுதிகளுள் ஒன்று நட்பு. பெயர், புகழ், காசு, பணம் உள்ளிட்டவைகளை எளிதாக சம்பாதித்து விடலாம். ஆனால் ஒரு உண்மையான நண்பனை சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல. அதன்படி, போட்டி, பொறாமை நிறைந்த இவ்வுலகில், குறிப்பாக சினிமாவில் ஒரே காலக்கட்டத்தில் அறிமுகம் ஆகி, இரு பெரும் துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக விளங்கியவர்கள், சினிமா துறையின் மாபெரும் சிகரங்களாக பார்க்கப்பட்ட MG ராமசந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர். சினிமாத்துறையில் அறிமுகம் ஆகும் முன்னரே இருவருக்கும் பழக்கம் உண்டு என சிவாஜி கணேசன் 'கதாநாயகனின் கதை' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

card 2

சேர்ந்தே வளர்ந்த இரு பெரும் நட்சத்திரங்கள் 

"'மதுரை ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்.,வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது." "தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார்"என MGR-உடன் தனது பால்யகாலத்து நட்பை பற்றி கூறி இருந்தார் சிவாஜி. MGR-இன் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரையிடுவதில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை எதிர்த்து, தன்னுடைய திரையரங்கில் வெளியிட்டாராம் சிவாஜி.