Page Loader
2022-ல் தமிழ் சினிமாவில் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வேறு மொழி திரைப்படங்கள்
பாக்ஸ் ஆபிஸ் செய்த வேறு மொழி திரைப்படங்கள்

2022-ல் தமிழ் சினிமாவில் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வேறு மொழி திரைப்படங்கள்

எழுதியவர் Saranya Shankar
Dec 22, 2022
08:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடம் 60 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட தமிழ் திரையுலகில், மற்ற மாநில மொழி திரைப்படங்களையும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அப்படி 2022ல் டப் செய்து வெளிவந்து தமிழ் மக்களின் ஆதரவை பெற்று ஹிட் ஆகிய வேற்று மொழி படங்கள் பற்றி பார்ப்போம். 2022இல் பிரம்மாண்ட படைப்பாக உருவான இந்த RRR திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்த படத்தில் N. T. ராமாராவ் ஜூனியர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். 550 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 1200 கோடி வசூல் சாதனை செய்தது.

அதிக வசூல்

தமிழில் அதிக வசூல் செய்த கன்னட மொழி படங்கள்

2018-ல் கன்னட மொழியில் வெளியாகி டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கே.ஜி.எஃப் -ன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகியது. அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகளவில் 1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. அடுத்தாக கன்னட மொழியில் வெளியான காந்தாரா. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழில் டப் செய்யப்பட்டு பின்னர் வெளியாகியது. வெறும் 15 கோடி செலவில் உருவான இந்த படம் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து நல்ல வருவாயை ஈட்டியது.