Page Loader
தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தீர்ப்பு தேதி அறிவிப்பு
இருவரும் மனமொத்து பிரிவது என முடிவெடுத்துள்ளனர்

தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தீர்ப்பு தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2024
01:02 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இருவரும் மனமொத்து பிரிவது என முடிவெடுத்து மியூச்சுவல் கன்செண்ட் முறைப்படி விவாகரத்து வழக்கை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகியிருந்தனர். இந்த நிலையில் இன்றைய விசாரணையின் முடிவில், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் இருவருக்கும் திருமண விவகாரத்தை நீதிமன்றம் உறுதி செய்யும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஊடகத்தில் வெளியான 'இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள்' என்ற செய்தி வெறும் வதந்தி என தெரியவருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post