ஜார்ஜ் குட்டியின் ரகசியம் உடையப்போகும் நேரம் வந்தாச்சு! 'த்ரிஷ்யம் 3' ரிலீஸ் தேதியுடன் மோகன்லால் வெளியிட்ட அப்டேட்
செய்தி முன்னோட்டம்
இந்திய திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் ஒன்றான 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஜார்ஜ் குட்டியாக மோகன்லால் மீண்டும் தனது ஐகானிக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். அடர்ந்த தோட்டத்தின் பின்னணியில், ஜார்ஜ் குட்டி ஏதோ ஒரு தீவிரச் சிந்தனையில் இருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள "The past never stays buried" என்ற வாசகம், முந்தைய பாகங்களில் மறைக்கப்பட்ட ரகசியங்கள் மீண்டும் துரத்த போவதை உறுதிப்படுத்துகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Drishyam3 | Worldwide Release | April 2, 2026@jeethu4ever @antonypbvr @KumarMangat @jayantilalgada @AbhishekPathakk #MeenaSagar@aashirvadcine @PanoramaMovies @PenMovies @ram_rampagepix @Rajeshmenon1969 @Abh1navMehrotra @drishyam3movie @pharsfilm pic.twitter.com/ZJvWCIH43m
— Mohanlal (@Mohanlal) February 13, 2026