LOADING...
"எங்களுக்குன்னு 42 ரூல்ஸா?": கடுப்பான அல்லு அர்ஜுன் டீம்; பொய்யான வீடியோவால் எழுந்த சர்ச்சை
அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

"எங்களுக்குன்னு 42 ரூல்ஸா?": கடுப்பான அல்லு அர்ஜுன் டீம்; பொய்யான வீடியோவால் எழுந்த சர்ச்சை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2026
02:06 pm

செய்தி முன்னோட்டம்

பான்-இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இணையத்தில் பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுனின் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சட்ட நடவடிக்கை குறித்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பிராண்ட் வியூக நிபுணர் பேசும்போது, "அல்லு அர்ஜுனை சந்திப்பது மிகவும் கடினம்; அவரைச் சந்திக்க செல்பவர்கள் சுமார் 42 கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் விவாதங்களை கிளப்பியது.

விளக்கம்

அல்லு அர்ஜுன் டீம் விளக்கம்

இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள அல்லு அர்ஜுனின் குழு, "இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை. அல்லு அர்ஜுன் எப்போதும் தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளில் கண்ணியத்துடனும், எளிமையுடனும் நடந்து கொள்பவர். இத்தகைய அவதூறு செய்திகளைப் பரப்புபவர்கள் மீது எங்களது சட்டக் குழு மூலம் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட சட்ட எச்சரிக்கையை தொடர்ந்து, அந்த வீடியோவை வெளியிட்ட பாட்காஸ்ட் சேனலின் நிர்வாகி, அந்த வீடியோவை தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். அந்த வீடியோவில் பேசிய விருந்தினருக்கு இணையத்தில் அதிக அழுத்தம் மற்றும் மிரட்டல்கள் வருவதால், அவரது நலன் கருதி வீடியோவை நீக்குவதாக அந்த நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement