
இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் மட்டுமின்றி, உலகெங்கிலும் தனது படங்களால் முத்திரை பதித்தவர் இயக்குனர் மணிரத்னம்.
அவரின் பல படைப்புகள் தேசிய விருதுக்கு மட்டுமின்றி, ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனது படைப்புகளுக்கு பல விருதுகளை வென்றெடுத்து மகுடம் சேர்த்த மணிரத்தினத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தாண்டு முதல், இயக்குனர் மணிரத்னம் ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றுள்ளார். இதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு, புதிதாக 398 உறுப்பினர்கள் ஆஸ்கார் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவர்.
ஏற்கனவே தமிழ் சினிமாவிலிருந்து, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்
#CinemaUpdate | ஆஸ்கர் குழுவில் உறுப்பினரானார் இயக்குநர் மணிரத்னம்!#SunNews | #TheAcademy | #Manirathnam | @tarak9999 | @AlwaysRamCharan pic.twitter.com/Gjza9jN1jh
— Sun News (@sunnewstamil) June 29, 2023