
கூலி, ரோலக்ஸ், கைதி 2 படங்களின் அப்டேட்டுகளை வழங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தற்போது கூலி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
இன்று சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படமும் வெளியாகிறது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜின் ரெவியூ என்ன என அப்போது நிருபர்கள் கேட்கையில் தான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை எனவும், இன்றிரவு பார்க்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும், லோகேஷின் உதவி இயக்குனர்கள் பலர், ரெட்ரோ படத்தில் பணிபுரிந்துள்ளதாகவும் அதனால் படத்தை பெற்றி அப்டேட்ஸ் தான் அவ்வப்போது அறிந்திருந்ததாகவும் கூறினார்.
அப்டேட்ஸ்
கைதி 2, ரோலெக்ஸ் படங்களை பற்றியும் கூறிய லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் மேலும், சூர்யாவுடன் இணைந்து ரோலெக்ஸ் படம் செய்வதையும் உறுதியாக கூறினார். எனினும் தற்சமயம் அவர் கைவசம் இருக்கும் படங்களை முடித்த பின்னரே ரோலெக்ஸ் ஷூட்டிங் நடக்கும் எனவும் கூறினார்.
இதற்கிடையே சூர்யாவும் கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னரே இந்த படப்பிடிப்பு நாடாகும் என அவர் கூறினார். அப்போது நிருபர்கள் கைதி 2 படத்தின் அப்டெட் பற்றியும் கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதில்கூறிய லோகேஷ், அடுத்தாக கைதி 2 படத்தின் பணிகள் துவங்கும் எனவும் கூறினார். தொடர்ச்சியாக 3 பெரிய படங்களின் அப்டேட்களை லோகேஷ் வழங்கியதை கேட்டு ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஸ்ரீ உடல்நலம் ?லோகேஷ் சொன்ன எதிர்பாரா பதில்https://t.co/JcwRakr53W#lokeshkanagaraj #sree #cinemanews #tamilcinema #tamilmovie #viralvideo
— Thanthi TV (@ThanthiTV) May 1, 2025