
ஒன்றாக நடிக்கும் விஜய்-ஷாருக்கான்: இயக்குனர் அட்லி சூசகம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை தான் இயக்குவது குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் அட்லி சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஜவான் படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமான இயக்குனர் அட்லி, அப்படத்தில் ஷாருக்கானை இயக்கினார்.
இப்படம் உலகம் முழுவதும் 4,500 திரைகளுக்கு மேல் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து, ஷாருக்கானுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு மெகாஹிட் திரைப்படத்தை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, அட்லி இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது.
சமீபத்தில் ஒரு ஆன்லைன் நேர்காணலில் பேசிய இயக்குனர் அட்லி, விஜய் மற்றும் ஷாருக்கான் அவரது பிறந்த நாள் விழாவில் சந்தித்துக் பேசியதாகவும், அவர்கள் என்ன பேசினார்கள் என தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
2nd card
அட்லியை அணுகிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம்
மேலும் விஜய் இடம் பேசிய பின்னர், ஷாருக்கான் அட்லியிடம், " நீ இரண்டு ஹீரோக்கள் வைத்து படம் எடுப்பதாக இருந்தால் சொல் நாங்கள் நடிக்கிறோம்" என தெரிவித்ததாகவும்,
நடிகர் விஜயும், "ஆமாம்பா நாங்க ரெடி" எனக் கூறியதாகவும் அட்லி கூறியுள்ளார்.
அவர் இத்திரைப்படத்திற்காக உண்மையாக உழைத்து வருவதாகவும், இருப்பினும் படம் இன்னும் உறுதியாக வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜவான் படத்தின் சண்டை பயிற்சியாளர், அவரின் நண்பர்களுக்கு படத்தை போட்டு காட்டியதாகவும், அவர்களுக்கு பிடித்து போக ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமும் தன்னை அணுகியதாக அவர் தெரிவித்துள்ளார்.