ஆதியின் புதிய படம்; 13 வருடத்திற்கு பிறகு இணையும் 'ஈரம்' பட கூட்டணி
செய்தி முன்னோட்டம்
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறது ஈரம் படத்தின் ஆதி-அறிவழகன் கூட்டணி.
2009-ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் தயாரித்து வெளிவந்த சூப்பர் நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஈரம் ஆகும்.
இப்படத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் உலகம் முழுவதும் 120 திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.
முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்த ஆதிக்கு இது ஒரு நல்ல படமாக அமைந்தது.
இதனையடுத்து பல படங்களில் நடித்து ஆதி மரகதநாணயம் படத்தில் இணைந்து நடித்த நிக்கி கல்ராணியை காதலித்து மணந்தார்.
தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதியின் நடிக்க போகும் அடுத்த படம் 'சப்தம்' என தகவல் வெளிவந்துள்ளது.
ஹாரர் திரில்லர் படம்
ஈரம் பட இயக்குனரின் அடுத்த ஹாரர் திரில்லர் படம்
சமீபத்தில் இயக்குனர் அறிவழகன் இயக்கிய 'தமிழ் ராக்கர்ஸ்' எனும் வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் படபூஜை நடைபெற்று படப்பிடிப்புகள் ஆரம்பமாகி உள்ளன.
இந்த பட கூட்டணி வெற்றி பெரும் எதிப்பார்க்க படுகிறது. இப்படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்து, தமன் இசையமைக்கிறார்.
7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா ப்ரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் சிவா மற்றும் இப்படத்தின் இயக்குனரான அறிவழகன் சேர்ந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இவர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் பார்டர் படம் விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப் படுகிறது.