
விஜய் தான் நம்பர் 1; உதயநிதி ஸ்டாலினிடம் அதிக திரைக்களை கேட்ட தில் ராஜு
செய்தி முன்னோட்டம்
தமிழ் நாட்டில் இருபெரும் நடிகர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜீத் ஆவர்.
வருகிற பொங்கலுக்கு இந்த இருவரின் படங்களான வாரிசு மற்றும் துணிவு வெளியாக உள்ளன.
8 வருடங்களுக்கு பிறகு இருவரின் படங்களும் எதிரெதிர் மோதிக் கொள்ளுவதால் இரு நடிகர்களின் ரசிகர்களிடமும் பெரும் எதிப்பார்ப்பை இந்த படம் பெற்றுள்ளது.
இதனிடையே பொங்கல் ரிலீஸ்க்கு ரெடியாக இருக்கும் இந்த இரண்டு படங்களுமே சம அளவில் தியேட்டர்கள் கொடுக்கப்படும் என்று துணிவு படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
ஆனால் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸின் துணிவுக்கு அதிக ஸ்கீரின் ஒதுக்கிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிலீஸில் சர்ச்சை
துணிவு Vs வாரிசு பட ரிலீஸில் சர்ச்சை
இதனால் துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகியுள்ளது.
இதனை பற்றி முதன் முதலாக பேசியுள்ள வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியதாவது;
"வாரிசு படத்துக்கு, துணிவு படத்திற்கு சமமான தியேட்டர்கள் கிடைக்க பெறவில்லை என்றும் மேலும் தமிழ் நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார் ஆனால் அஜித் நடித்துள்ள துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் அவர்களின் படத்திற்கு அதிக தியேட்டரைகளை பிடித்து வைத்துள்ளது.
வாரிசு படத்திற்கு தேவையான தியேட்டரைகளை கொடுக்க மறுக்கின்றனர்.
துணிவு படத்திற்கு சமமாக வாரிசு படத்திற்கும் தியேட்டர்களை கொடுத்தால் போதுமானது." என்று அந்த பேட்டியில் தில் ராஜு கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியதாவது
Dil Raju pic.twitter.com/38IlXxzGTW
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 15, 2022