LOADING...
'காந்தாரா: சாப்டர் 1' பார்ப்பதற்கு முன்னர் இந்த 'கண்டிஷன்கள்' கடைபிடிக்கப்படவேண்டுமா? 
ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக வெளியிடப்பட்டதாக கூறும் போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது

'காந்தாரா: சாப்டர் 1' பார்ப்பதற்கு முன்னர் இந்த 'கண்டிஷன்கள்' கடைபிடிக்கப்படவேண்டுமா? 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2025
09:56 am

செய்தி முன்னோட்டம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில், படத்தின் தயாரிப்பாளர்களான ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக வெளியிடப்பட்டதாக கூறும் போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதில் கூறப்பட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் போஸ்டரில், படம் பார்க்க வருபவர்கள் மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ, அசைவ உணவு சாப்பிடவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்களை ஈர்த்தது. 'காந்தாரா' என்பது கடலோர கர்நாடகாவில் பிரபலமான பூத கோலா வழக்கத்தை விரிவாக குறிப்பிடும் படம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விளக்கம்

இயக்குனர்- நடிகர் ரிஷப் ஷெட்டி விளக்கம்

இப்படம் அந்த பகுதி மக்களின் தெய்வ வழிபாட்டை சித்தரிக்கும் படம் என்பதால் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்ட 'கண்டிஷன்கள்' உண்மையாக இருக்குமோ என பலரும் யோசித்த நிலையில், படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி, "உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அந்த போஸ்டர் யாரோ சிலரால் போலியாக உருவாக்கப்பட்டது. படம் பிரபலமாகும்போது, தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள இதுபோன்ற செயல்களைச் சிலர் செய்கின்றனர். இந்தப் போஸ்டருக்கும் எங்கள் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெளிவுபடுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post