
'ஜெயிலர்' வெற்றி எதிரொலி - அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி
செய்தி முன்னோட்டம்
'ஜெயிலர்' படம் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை, கலாநிதி மாறனின் துணைவியார் திருமதி.காவேரி கலாநிதி, அப்பல்லோ நிறுவனத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான திரு. பிரதாப் ரெட்டியிடம் நேற்று(செப்.,6) வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று(செப்.,7) சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு புற்றுநோய் பாதிப்படைந்த ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ரூ.60 லட்சம் மதிப்பிலான காசோலையினை காவேரி கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.
இதனை அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயூட் தலைவர்களான மருத்துவர்கள் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் ஹேமந்த் ராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகி உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நிதியுதவி
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் ₹60 லட்சம் வழங்கினார் காவேரி கலாநிதி மாறன்!#SunNews | @sunpictures pic.twitter.com/L4eLKmciyV
— Sun News (@sunnewstamil) September 7, 2023