Page Loader
ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள்
ரஜினிகாந்திற்கு ஜோடியாக '80ஸ் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 09, 2024
11:14 am

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' நடித்து வருகிறார். அந்த படத்தை பற்றிய அறிவிப்பு சென்ற வாரம் வெளியானது. இந்த நிலையில் படத்தில் இணையவுள்ள பிரபல நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்திற்கு ஜோடியாக '80ஸ் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. DTNext-டில் வெளியான செய்திப்படி, இந்த திரைப்படத்தில் மைக் மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். '80களின் காலகட்டத்தில், ரஜினிக்கு போட்டியாக கருதப்பட்ட மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதோடு, இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

embed

Twitter Post

As per DTNext, - #Thalaivar171: Mic Mohan is expected to play the Antagonist role against Superstar #Rajinikanth🤜🤛 - #VijaySethupathi has been approached for an important role💫 - DT Next says that #ShahRukhKhan will likely play a cameo, few other sources say #RanveerSingh... pic.twitter.com/QiFk8FcVCz— AmuthaBharathi (@CinemaWithAB) April 9, 2024