சினிமா தணிக்கைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: சென்சார் போர்டு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
திரைப்படத் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பிக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) மிகக் கடுமையான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இனி அறிவிக்கப்பட்ட வெளியீட்டுத் தேதிகளைக் காரணம் காட்டி தணிக்கைச் சான்றிதழை விரைந்து பெற முடியாது என்பதையும், உரிய கால அவகாசத்துடன் முழுமை பெற்ற திரைப்படப் பிரதிகளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் தணிக்கை வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது
தலைப்புகளுக்கு இறுதி அனுமதி அவசியம்
முழுமையான இறுதி பிரதி சமர்ப்பிப்பது கட்டாயம்
தணிக்கைக்குச் சமர்ப்பிக்கப்படும் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட இறுதிப் பிரதியாக இருக்க வேண்டும்.
தற்காலிக இசை, முழுமையடையாத கிராபிக்ஸ், விடுபட்ட எச்சரிக்கை பலகைகளுடன் வரும் படங்கள் நிராகரிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசன வரிகள் மற்றும் ஆடியோ விவரிப்பும் பிரதியிலேயே இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள், டீசர்கள் மற்றும் டிரெய்லர்களுக்கான விண்ணப்பங்களில் குறிப்பிடப்படும் தலைப்புகள் பதிவு செய்யப்பட்டதாலேயே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத முடியாது.
தலைப்புகளை ஆய்வு செய்து மாற்றங்களைப் பரிந்துரைக்கத் தணிக்கைக் குழுவிற்கு முழு உரிமை உண்டு. விதிமுறைகள் பூர்த்தியாகும் வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
வெளியீட்டு தேதி
ரிலீஸ் தேதியைக் காட்டி அவசரப்படுத்த முடியாது
திரையரங்கு வெளியீட்டுத் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக தணிக்கை நடைமுறைகளை முடுக்கிவிடவோ அல்லது அவசரப்படுத்தவோ முடியாது என்பதை சிபிஎஃப்சி தெரிவித்துள்ளது.
குழுவின் மதிப்பாய்வு, மறுஆய்வு மற்றும் திருத்தங்கள் அனைத்தும் அரசால் வகுக்கப்பட்ட சட்டப்பூர்வ காலக்கெடுவின்படியே நடைபெறும்.
எனவே, தயாரிப்பாளர்கள் திட்டமிட்ட வெளியீட்டுத் தேதிக்கு முன்னதாகவே போதுமான கால அவகாசத்துடன் தணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சினிமாட்டோகிராப் சட்டம் 1952 மற்றும் சினிமாட்டோகிராப் விதிகள் 2024 ஆகியவற்றைத் தயாரிப்பாளர்கள் முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு தணிக்கை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.