NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 
    பொம்மன்-பெல்லி தம்பதியினர் ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு

    பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 

    எழுதியவர் Nivetha P
    Aug 04, 2023
    07:48 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம்-'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'படத்தினை இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கியிருந்தார்.

    பொம்மன்-பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையினை பின்னணியாகக்கொண்டே இப்படம் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியினை அடைந்தது.

    இதனால் அத்தம்பதியினரும் பெருமளவில் பிரபலமடைந்தனர்.

    பிரதமர் மோடி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இவர்களை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திகி மீது இத்தம்பதி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

    ஆவணப்படம் எடுக்கையில் தங்களிடம் அன்பாக நடந்துக்கொண்டதாகவும் தற்போது எவ்வித உதவியினையும் செய்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.

    மேலும், இவர்களுக்கு சொந்தமாக வீடு, கார், இடம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்துள்ளதாகவும், வங்கிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருப்பதாகவும் கார்த்திகி பல்வேறு பேட்டிகளில் கூறுவது அனைத்தும் பொய் என இத்தம்பதி மிகுந்த ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

    ஆவணப்படம் 

    தங்களிடம் பெற்ற பணத்தையும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு 

    மேலும், "அந்த திரைப்படத்தில் ஒரு திருமண விழா போன்ற ஒரு காட்சியினை எடுக்க தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. நாங்கள் எங்கள் பேத்தி படிப்பிற்காக போஸ்ட் ஆபிஸில் போட்டு வைத்திருந்த பணம் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை எடுத்து கொடுத்தோம். ஆனால் இதுவரை அந்த பணத்தினை அவர் திருப்பி தரவில்லை" என்றும் கூறியுள்ளனர்.

    அதேபோல் தங்களை மும்பைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்து சென்று புகைப்படங்கள் எடுத்து கொண்ட பின்னர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும்,

    தமிழகத்திற்கு திரும்பி வர பணமும் கொடுக்கவில்லை, மற்றொருவர் செய்த உதவி மூலம் ஊருக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.

    தங்கள் பேத்தியை படிக்க வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார், ஆனால் அதனையும் அவர் செய்யவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை இத்தம்பதி வைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர்
    ஆஸ்கார் விருது
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இயக்குனர்

    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஏஆர் ரஹ்மான்
    ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள "நாட்டு கூத்து" பாடல்: ஒரு குட்டி பிளாஷ்பேக் வைரல் செய்தி
    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்? இந்தியா
    ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 10 இந்தியப் படங்கள் இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்; மந்திரி சபையில் மாற்றம் என தகவல் மத்திய அரசு
    பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை டெல்லி
    விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள்  வந்தே பாரத்
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025