Page Loader
ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரின் வீடு 
தந்தை தர்மேந்திராவுடன், நடிகர் சன்னி தியோல்

ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரின் வீடு 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 21, 2023
09:28 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி. தமிழ்நாட்டிலிருந்து சென்று, ஹிந்தி படவுலகில் கோலோச்சிய நடிகைகளில் முன்னோடி அவர். ஹேமமாலினி, அவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த தர்மேந்திராவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் தர்மேந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு. அவர்கள் பெயர் சன்னி தியோல், பாபி தியோல். இவர்கள் இருவருமே ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள். இதில், சன்னி தியோல் நடித்த 'காடர் 2' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இதனிடையே, மும்பை ஜூஹூ பகுதியில், சன்னி தியோல் வசித்து வந்த வீடு, பேங்க் ஃஆப் பரோடா மூலம் ஏலத்திற்கு வருவதாக நேற்று (ஆகஸ்ட் 20) அறிவிக்கப்பட்டது

card 2

நிறுத்தி வைக்கப்பட்ட ஏலம்

ரூ 56 கோடியை திரும்பப் பெறுவதற்காக, அவரின் சொத்து முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நடிகர் சன்னி தியோல், டிசம்பர் மாதம் முதல் பாங்க் ஆஃப் பரோடாவிடமிருந்து ₹ 55.99 கோடி கடனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூஹூவில் அமைந்துள்ள அவரின் வீடு மற்றும் 599.44 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சன்னி வில்லா மற்றும் சன்னி சவுண்ட்ஸ் ஆகியவையும் ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த ஏலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பின் படி, 2002 ஆம் ஆண்டின் சர்ஃபேசி சட்டத்தின் விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏலத்தைத் தடுக்க, வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தியோல்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று டெண்டர் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.