Page Loader
நடிகர் அஜித் ஓட்டிய பைக் - ஏவிஎம் மியூசியத்தில் இடம்பெற்றது
நடிகர் அஜித் ஓட்டிய பைக் - ஏவிஎம் மியூசியத்தில் இடம்பெற்றது

நடிகர் அஜித் ஓட்டிய பைக் - ஏவிஎம் மியூசியத்தில் இடம்பெற்றது

எழுதியவர் Nivetha P
Sep 16, 2023
08:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவர் நடிகர் அஜித். இவர் பைக் மற்றும் கார்கள்மீது அதீத ஆர்வமுள்ளவர். பைக் ட்ரிப் டூர் நிறுவனம் ஒன்றையும் நடிகர் அஜித் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது வெளிநாடுகளுக்கு பைக் ரைடிங் சென்றுள்ளார். இவரது அடுத்த படமான 'விடாமுயற்சி' திரைப்படம் இதனால் கால தாமதம் ஆகிவருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையே, நேற்று(செப்.,15)இவர் ஓமன் நாட்டில் பைக்-ரைடிங் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. இதனிடையே, நடிகர் அஜித் கடந்த 2006ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'திருப்பதி'. இதில் இவர் ஓட்டிய பல்சர் பைக்கினை ஏவிஎம் நிறுவனம் தனது ஸ்டுடியோவில் உள்ள சினிமா மியூசியத்தில் தற்போது வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அல்டிமேட் ஸ்டார் அஜித்