
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: முதல் வாரத்திலேயே இரண்டு பேர் வெளியேற்றம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் வாரத்திலேயே எதிர்பாராத திருப்பங்களுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான போட்டியாளர்கள் ரசிகர்களுக்குப் புதிய முகங்களாக இருந்ததால், இந்த சீசனின் வெற்றி குறித்து ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்தது. எனினும், முதல் வாரத்திலேயே மோதல்கள் மற்றும் விமர்சனங்களுடன் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்த சீசனின் முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலாவதாக, நந்தினி தன்னால் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி, தாமாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். நந்தினி வெளியேறியதால், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
பிரவீன் காந்தி
பிரவீன் காந்தி வெளியேற்றம் என தகவல்
ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வாக்களிப்பின் அடிப்படையில் நடிகர் மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி, குறைந்த வாக்குகளைப் பெற்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரவீன் காந்தி வீட்டிற்குள் பரபரப்பான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் வாரமே அவர் வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நிகழ்ச்சியில் அதிக சுவாரஸ்யத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் வெளியேறியது ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளதால், நிகழ்ச்சி குழு விரைவில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் புதிய போட்டியாளர்களைச் சேர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.