LOADING...
திருவிழா-க்கு Ready ஆகுங்க! அக்டோபர் 5இல் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் புதிய புரோமோ வெளியீடு

திருவிழா-க்கு Ready ஆகுங்க! அக்டோபர் 5இல் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் புதிய புரோமோ வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2025
05:03 pm

செய்தி முன்னோட்டம்

அதிக எதிர்பார்ப்புக்குள்ளான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கவுள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஒன்பதாவது சீசன் எதிர்வரும் அக்டோபர் 5, 2025 அன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, முதல் சீசனில் இருந்து வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதியே மீண்டும் செயல்பட உள்ளார். பிக்பாஸ் சீசன் 9 குறித்த முதல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் வடிவமைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாக்கப் பாக்க தான் புரியும், போகப்போக தான் தெரியும் என்ற பெயரில் புதிய புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

ரியாலிட்டி ஷோ

இந்தியாவின் பிரபலமான ரியாலிட்டி ஷோ

இந்தியாவின் சின்னத்திரைகளில் அதிகம் பேசப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ், இந்த சீசனில் என்னென்ன புதிய திருப்பங்கள், புதுமையான சவால்கள் மற்றும் எதிர்பாராத போட்டியாளர்களைக் களமிறக்கப் போகிறது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முந்தைய சீசன்களைப் போலவே, இந்த சீசனும் 100 நாட்களுக்கும் மேல் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களின் பெயர்களைப் போட்டியாளர்களாகக் குறிப்பிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 5 முதல் வார நாட்களில் இரவு 9:30 மணிக்கும், வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post