LOADING...
பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நான்காவது வாரத்தில் கலையரசன் எலிமினேட்? வைல்ட் கார்டு என்ட்ரியால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
பிக்பாஸ் தமிழ் சீசன் 9

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நான்காவது வாரத்தில் கலையரசன் எலிமினேட்? வைல்ட் கார்டு என்ட்ரியால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2025
06:26 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களால் இந்த வாரம் கவனம் பெற்றுள்ளது. முதல் மூன்று வாரங்களில் பிரவீன் காந்தி, அப்சரா சிஜே மற்றும் ஆதிரை ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த வார எலிமினேஷன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த கானா வினோத், கம்ருதீன், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி மற்றும் கலையரசன் ஆகியோரில், குறைந்த வாக்குகளைப் பெற்ற கலையரசன் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைல்ட் கார்டு

வைல்ட் கார்டு போட்டியாளர்கள்

அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கலையரசன் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்று, அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அதிரடியாக நுழையவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான நடிகை திவ்யா கணேஷ், நட்சத்திரத் தம்பதிகளான பிரஜன் மற்றும் சான்ட்ரா மற்றும் சீரியல் நடிகர் அமித் பார்கவ் ஆகியோர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் நான்கு பேர் நுழையவுள்ளதால், நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சிலர் தொடர்ந்து எல்லைமீறிப் பேசுவது தொடர்வதால் விஜய் சேதுபதி அவர்களைக் கடுமையாகக் கண்டிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.