பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9'-ல் ஐந்தாவது வார வெளியேற்றத்திற்கான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இந்த வாரம் மொத்தம் 12 போட்டியாளர்கள் வெளியேற்றப் பட்டியலில் உள்ளதால், யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில், போட்டியாளர் ரம்யா ஜோவும் இடம்பெற்றுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற வெளிப்படையான நாமினேஷன் செயல்முறை காரணமாக, வீட்டின் பாதிக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்ற அபாய வளையத்திற்குள் வந்துள்ளனர். இதில் ரம்யாவை பெற்ற வோட்டு ஒன்று தான். அவரை நாமினேட் செய்தது திவாகர் மட்டுமே. இந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வெளியேற்றம் குறித்த உறுதி செய்யப்பட்ட அறிவிப்பு வார இறுதி எபிசோடில் மட்டுமே வெளியாகும்.
டபுள் எவிக்ஷன்
இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?
ரம்யா வெளியேற்றப்பட்டார் என சில தகவல்கள் பரவி வரும் நிலையில், ஒரு சிலர் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் எனவும் யூகித்து வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் அது FJ வாக இருக்க கூடும் எனவும், வேறு சிலர் அது துஷார் எனவும் கூறு வருகின்றனர். கடந்த வாரங்களை போல இந்த வாரம் வீக்எண்டு எபிசொட் ஷூட்டிங் சனிகிழமை நடைபெறவில்லை. மாறாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதனால் இன்றே ஒரு போட்டியாளர் வெளியேறுகிறாரா அல்லது இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனரா என்ற கேள்விக்கு விடை தெரியும். இந்த நிலையில், இந்த வாரத்தில் சீக்ரெட் டாஸ்க்கை திறம்பட செய்து முடித்த சந்திராவிற்கு NFP (nomination free pass)-ஐ பிக் பாஸ் வழங்குவார்.