LOADING...
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே போட்டியாளர் நந்தினி வெளியேற்றம்?
பிக் பாஸ் தமிழ் முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே போட்டியாளர் நந்தினி வெளியேற்றம் என தகவல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே போட்டியாளர் நந்தினி வெளியேற்றம்?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2025
08:52 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாட்டர்மெலன் திவாகர், இயக்குநர் பிரவீன் காந்தி, வி.ஜே.பாரு உட்பட 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், முதல் வார எவிக்ஷன் சனிக்கிழமை (அக்டோபர் 11) படமாக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பே ஒரு அதிரடி வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியான தகவல்களின்படி, போட்டியாளர்களில் ஒருவரான நந்தினி தவிர்க்க முடியாத காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே நந்தினி சோர்வான மனநிலையிலேயே காணப்பட்டார்.

ஆர்வமின்மை 

நிகழ்ச்சியில் ஆர்வமின்மை

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர், நிகழ்ச்சியில் அழுது புலம்பியதையும், சக போட்டியாளர் கனி அவரைத் தேற்றியதையும் பார்வையாளர்கள் பார்த்தனர். நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும், மற்ற போட்டியாளர்களுடன் அவர் பழகத் தயாராகவில்லை என்றும், நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்காததால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்காது என்று அறிவிக்கப்படும் சில சீசன்களைப் போல இம்முறை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், இந்தத் திடீர் வெளியேற்றம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தகவல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இன்று இரவு அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.