பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் சமையல் ராணி கனி வெளியேற்றம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் கனி வெளியேறி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். பின்னர், வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளே சென்றனர். ஆனால், இந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஆட்டத்தை மாற்றும் அளவிற்குப் பெரிதாகச் செயல்படவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
வெளியேற்றம்
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய ஐந்தாவது நாளிலேயே உடல்நிலை சரியில்லாததால் நந்தினி வெளியேறினார். அதைத் தொடர்ந்து பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் என ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது, நாமினேஷன் பட்டியலில் இருந்த கனியும், குறைந்த வாக்குகளைப் பெற்று இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் பெரிதாக விளையாடாமல் சமையல் பணியை மட்டுமே செய்ததால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, கனி பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ.10,000 என்ற கணக்கில் சம்பளமாகப் பெற்றிருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.