LOADING...
பிக் பாஸ் தமிழ் 9: வைல்ட்கார்டு போட்டியாளர் பிரஜினிற்கும், கம்ருதினுக்கும் கைகலப்பா? உண்மை இதுதான்!
வைல்ட்கார்டு போட்டியாளர் பிரஜினிற்கும், கம்ருதினுக்கும் கைகலப்பா?

பிக் பாஸ் தமிழ் 9: வைல்ட்கார்டு போட்டியாளர் பிரஜினிற்கும், கம்ருதினுக்கும் கைகலப்பா? உண்மை இதுதான்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2025
10:21 am

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக கூறப்பட்டாலும், சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களால் இந்த வாரம் கவனம் பெற்றுள்ளது. முதல் நான்கு வாரங்களில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை மற்றும் கடந்த வாரம் கலையரசன் ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த வார தொடக்கத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் BB வீட்டிற்குள் நுழைத்தனர். வந்த முதல் நாளே அவர்கள் மற்ற போட்டியாளர்களிடத்தில் வெளியுலக பிம்பம் எப்படி இருக்கிறது என தெளிவுபடுத்த முற்பட்டனர். இதனை ஆரம்பத்தில் ஹவுஸ்மேட்ஸ் கேட்டுக்கொண்டாலும், ஒரு சிலருக்கு அது மனக்கசப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திவாகர் மற்றும் VJ பார்வதி மோதல் மனப்பான்மையுடன் அணுகினர்.

ப்ரோமோ

ப்ரோமோவில் காட்டப்படுவது நிஜ சண்டையா?

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கம்ருதினிற்க்கும், பிரவீனிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதை தடுக்க நடுவில் ப்ரஜின் வர, மூவருக்கும் இடையே கைகலப்பு நடக்கிறது. இதை மற்ற வீட்டார் தடுக்க முற்படுகின்றனர். ஒரு கட்டத்தில் ப்ரஜின் மற்றும் கம்ருதின் அடிதடியில் ஈடுபடுவது போல காட்டப்பட்டுள்ளது. அடுத்து சாண்ட்ரா பிரஜினிடம் அழுவது போலும் காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ரெட் கார்டு தரப்படும் என அதிர்ச்சியடைந்து கேள்விகள் கேட்டுவரும் நிலையில், அன்சீன் வீடியோவில் இது முற்றிலும் பிராங்க் என தெரிய வந்துள்ளது. ப்ரஜின், கம்ருதின் மற்றும் பிரவீன் மூவரும் பிளான் செய்து பிராங்க் செய்துள்ளனர்! நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க ப்ரஜின் எடுத்த இந்த முயற்சி வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post