LOADING...
பிக் பாஸ் தமிழ் 9: சாண்டி மாஸ்டர்-ஐ நினைவு கூர்ந்த பிக் பாஸ்
சாண்டி மாஸ்டர்-ஐ நினைவு கூர்ந்த பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் 9: சாண்டி மாஸ்டர்-ஐ நினைவு கூர்ந்த பிக் பாஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2025
01:47 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 9. இந்த சீசன் ஆரம்பம் தொட்டே மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை சம்பாதித்து வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் அவ்வப்போது சவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இருக்கும், போட்டியாளர்களும் அதற்கேற்றாற் போல தங்களால் முடிந்த வரை நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வார்கள். ஆனால் இந்த சீசனில் 5 வாரங்கள் கடந்தும் போட்டியாளர்களிடையே சுவாரசியமும் இல்லை, ஒற்றுமையுணர்வும் இல்லை என்பதே பலரின் வாதம். நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக இந்த வாரம் ராஜா- ராணி டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் வினோத்தின் கானா ராஜ்ஜியம் ஒரு பக்கமும், திவாகரன் தர்பூசணி ராஜ்ஜியம் ஒரு பக்கமும் போட்டியிட போவதாக அறிவித்தார்.

பிக் பாஸ்

காலத்தில் தானே இறங்கிய பிக் பாஸ்

இதிலும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்படவே, பிக் பாஸ் தானும் இந்த போட்டியில் இறங்குவதாக அறிவித்தார். அதன் படி, ஒவ்வொரு போட்டியாளரையும் அழைத்து அவர்களுக்கு தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது கானா வினோத்திடம் "என்னுடைய சிஷ்யனின் நண்பன் தான நீங்கள்?" என கேட்டார். பிக்பாஸை உரிமையாக 'குருநாதா' என அழைப்பது சீசன் 3-இல் போட்டியாளராக வந்த சாண்டி மாஸ்டர் தான். பிக்பாஸும் அவரை சிஷ்யா என கூப்பிடுவார். அதை தற்போது அவர் நினைவு கூர்ந்து, என் சிஷ்யன் யாருடனும் சண்டை போட்டதில்லை, ஆனால் சிரிப்பை வரவழைக்க தவறியதுமில்லை என பெருமிதத்துடன் கூறினார். வினோத் அதை கடைபிடிக்குமாறும் அவர் அட்வைஸ் செய்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post