பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் சம்பளம்: யாருக்கு அதிகம், யாருக்குக் குறைவு?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளன. முந்தைய சீசன்களைக் காட்டிலும், இந்த சீசனில் சமூக ஊடகப் பிரபலங்கள் அதிகமாகப் பங்கேற்றுள்ளதால், சம்பள விகிதங்கள் குறைந்த அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் வெளியான தகவலின் படி, பிக் பாஸ் வீட்டுக்குள் குறைந்தபட்சச் சம்பளம் பெறும் போட்டியாளர்கள் பட்டியலில் மூன்று பேர் உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.8,000 மட்டுமே வழங்கப்படுகிறதாம். அதன்படி, கானா வினோத், சுபிக்ஷா மற்றும் கலையரசன் ஆகிய மூவருக்கும் ஒரு நாளைக்கு ரூ. 8,000 வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
சம்பளம்
போட்டியாளர்களின் சம்பள விவரங்கள்
இவர்களுக்கு அடுத்தபடியாக, நாள் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சம்பளம் பெறும் போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் ரூ. 10,000 பெறுவோர்: கனி, ஆதிரை, துஷார், எஃப் ஜே ஆகியோர்; ரூ. 12,000 அரோரா சின்க்லைருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளது. சபரி, பிரவீன் காந்தி, கம்ருதீன், அப்சரா, திவாகர், பிரவீன் ராஜ் ஆகியோருக்கு ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பளமும், விஜே பார்வதிக்கு நாளொன்றிற்கு ரூ. 20,000 சம்பளம் தரப்படுகிறதாம். இந்த சீசனில், அதிகபட்சச் சம்பளத்தைப் பெறுபவர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களே ஆவர். அதன்படி, பிரஜன், அமித், திவ்யா கணேஷ், சாண்ட்ரா ஆகியோருக்கு ரூ. 30,000 சம்பளம் தரப்படும்.