LOADING...
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: ஒரே வாரத்தில் வெளியேறிய நந்தினியின் ஊதியம் இவ்ளோதானா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர் நந்தினி

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: ஒரே வாரத்தில் வெளியேறிய நந்தினியின் ஊதியம் இவ்ளோதானா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2025
05:39 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, கடந்த வாரம் தொடங்கிய நிலையில், முதல் வாரத்திலேயே போட்டியாளர் நந்தினியின் திடீர் வெளியேற்றத்தால் எதிர்பாராத திருப்பத்தைக் கண்டது. பெரும்பாலான போட்டியாளர்கள் ரசிகர்களுக்குப் புதிய முகங்களாக இருந்ததால், சீசனின் வெற்றி குறித்து ஆரம்பத்தில் சந்தேகம் நிலவியது. இதனால், அனைவரும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்குடன் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கும் விதமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்ததற்காக மற்ற போட்டியாளர்களால் கேலி செய்யப்பட்ட பின்னர், நந்தினி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

வெளியேற்றம்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்

கனி அவரை சமாதானப்படுத்த முயன்றும், நந்தினி அனைவரும் போலியாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். சமையல் தொடர்பாக கனி மீது குற்றம் சாட்டி, பொய்யானவர்கள் இருக்கும் வீட்டில் என்னால் நடிக்க முடியாது என்று கத்தினார். நள்ளிரவு வரை தொடர்ந்து கத்தி அழுது கொண்டிருந்த நந்தினியை, பிக் பாஸ் அவரை கன்பெஷன் ரூமிற்கு அழைத்து விசாரித்தார். அப்போது, இங்கு யாரும் யதார்த்தமாக இல்லை என்றும் தன்னால் ஒரு போலி வாழ்க்கையை வாழ முடியாது என்றும் பேசினார். இதனையடுத்து, பிக் பாஸ் அவரை வீட்டை விட்டு வெளியேற அனுமதித்தார். வெறும் ஐந்து நாட்களே வீட்டில் இருந்த நந்தினிக்கு, ஆரம்ப ஒப்பந்தத்தின்படி நாள் ஒன்றுக்கு ₹1,000 என்ற விகிதத்தில் மொத்தம் ₹5,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.