பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நான்காவது வாரத்தில் வெளியேறிய அகோரி கலையரசன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முக்கியப் போட்டியாளராக பார்க்கப்பட்ட அகோரி கலையரசன், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அகோரி என்ற தனது அடையாளத்தை மாற்றுவதற்காகவே நிகழ்ச்சிக்குள் வந்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபட்டு சாமியாராக இருந்த கலையரசன், இந்த சீசனின் ஆரம்ப நாட்களில் இருந்தே போட்டியாளர்களுக்கிடையேயான சண்டை, வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தார். நான்காவது வாரத்தில் அவர் எல்லை மீறிப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கண்டிப்பு
விஜய் சேதுபதி கண்டிப்பு
இதன் காரணமாக, வார இறுதி எபிசோடில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, கலையரசனை மிகவும் கண்டித்தார். இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த கலையரசன், குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அவர் பெற்ற சம்பளம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அவரது சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அகோரி கலையரசனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, அமித் பார்கவ், சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகியோர் ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் 9 வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.