பிக் பாஸ் தமிழ் சீசன் 9: திவாகர், கனி திடீர் வெளியேற்றம்; இருவரும் பெற்ற மொத்தச் சம்பளம் எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் திவாகர் மற்றும் கனி ஆகிய இரண்டு முக்கியப் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 40 நாட்களுக்குப் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த அவர்கள் இருவரும் பெற்றச் சம்பளம் குறித்தத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமூக வலைதளப் பிரபலங்களை மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசனில், சுவாரஸ்யமான சில நிகழ்வுகளால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில், இந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில், அதிகம் பேசப்பட்ட திவாகர் மற்றும் கனி ஆகியோர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திவாகர்
திவாகர் வெளியேற்றம் ஏன்?
திவாகர், பெண்களிடம் முறையற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் புகார்கள் விமர்சிக்கப்பட்ட நிலையில், அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என பல போட்டியாளர்களாலும் கணிக்கப்பட்டக் கனியின் வெளியேற்றம், ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
சம்பளம்
சம்பள விவரங்கள்
40 நாட்கள் வீட்டில் இருந்த திவாகருக்கு, ஒரு நாளைக்கு ரூ.12,000 சம்பளம் பேசப்பட்டதாகவும், அதன் மூலம் அவர் மொத்தமாக சுமார் ரூ.5 லட்சம் வரை சம்பாதித்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிக்கு 40 நாட்களுக்கு மொத்தமாக ரூ.4 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய டாஸ்க்குகள் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கனியின் வெளியேற்றம் நிகழ்ச்சியின் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.