LOADING...
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவரா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவரா?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2025
03:46 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 47 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான வெளியேற்றம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்களாகச் சாண்ட்ரா, பிரஜின், அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வந்த பிறகு, வீடு இன்னும் பரபரப்பாக மாறியுள்ளது. குறிப்பாக, பிரஜின் மற்றும் சாண்ட்ரா கணவன்-மனைவியாக இருந்தும் தனித்தனி போட்டியாளராகச் சண்டையிடுவதுடன், தங்கள் ஆதிக்கத்தைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சாண்ட்ரா, பின்னர் சக போட்டியாளர்களிடம் சேட்டைகள் செய்வதுடன், சமீபத்தில் பிக் பாஸையே பகிரங்கமாகக் கிண்டல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறைந்த வாக்கு

குறைந்த வாக்குகளுடன் இருப்பது யார்?

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில், அரோரா, வி.ஜே.பார்வதி, விக்ரம், ரம்யா, அமித், பிரஜின், சாண்ட்ரா, சபரி, திவ்யா, சுபிக்‌ஷா ஆகியோர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். எனவே, குறைந்த வாக்குகளுடன் நீடித்து வரும் கெமி மற்றும் வியானா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது. இதில், வியானா தொடர்ந்து வீட்டிற்குத் தேவையான கன்டன்ட் கொடுத்து வருவதால், அவர் வெளியேற வாய்ப்பில்லை என்றும், கெமிதான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த வாரப் பிரச்னைகள் குறித்து வார இறுதியில் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவாரா, குறிப்பாகச் சாண்ட்ரா மற்றும் பிரஜின் ஆகியோரை கண்டிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.