NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று தொடங்குகிறது

    இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ

    எழுதியவர் Srinath r
    Oct 01, 2023
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று (அக்டோபர் 1) தொடங்குகிறது.

    இன்று மாலை 6:00 மணிக்கு தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், இந்த சீசனில், முதன்முறையாக இரு வீடுகள் இடம் பெற்றுள்ளன. போட்டியாளர்கள் பத்து பத்தாக பிரிக்கப்பட்டு இரு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.

    2nd card

    பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு எழுத்தாளர் 

    பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு எழுத்தாளர் பங்கேற்கிறார்.

    தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லி மற்றும் எழுத்தாளரான பவா செல்லதுரை இம்முறை பிக்பாஸில் பங்கேற்கிறார்.

    தற்போது ஆனந்த விகடனில் வெளியாகி வரும் 'சொல்வழிப் பயணம்' எனும் தொடர் மூலம் பிரபலமானார்.

    பவா செல்லதுரை வால்டர், ஜெய் பீம், ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிக்பாஸ் நுழைவு தனித்துவமாக பார்க்கப்படுகிறது.

    3rd card

    பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் விபரம்- 1

    நடிகர் கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸின் குடும்ப நண்பர் அனன்யா ராவ்.

    பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா, பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன், மலேசிய தமிழ் பெண்ணான மூன் நிலா வழக்கமான வெளிநாட்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்.

    குக் வித் கோமாளி புகழ் ரவீனா தாஹா, சீரியல் நடிகை நிவிஷா, பிக் பாஸ் அமீரை வளர்த்தவர்களின் மகள் ஐஷு உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    இது தவிர நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

    4th card

    பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் விபரம்- 2 

    நடன கலைஞர் விஜய் வர்மா, விஜே அர்ச்சனா, சூழல் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான நடிகர் ஜான்சன்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சத்யா சீரியலில் நடித்த சரவண விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சரவணன்.

    லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்த அக்ஷயா உதயகுமார், நடிகர் பால சரவணன்,

    நடிகை உமா ரியாஸ் மற்றும் சாமானிய குடும்பத்தில் பிறந்து இசையமைப்பாளர் ஆன நிக்‌ஷன் உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ப்ரோமோ

    Get Ready Folks..🔥 #GrandLaunch of Bigg Boss Tamil Season 7 - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/BtVk9VE3UP

    — Vijay Television (@vijaytelevision) October 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் டிவி
    பிக் பாஸ் தமிழ்
    கமல்ஹாசன்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான் ஐபிஎல் 2025

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? பிக் பாஸ் தமிழ்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி
    காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன் நடிகர்

    கமல்ஹாசன்

    கமல் முதல் ரஜினி வரை: தமிழ் திரைப்படங்களில் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் உபயோகித்த பிரபலங்கள் கோலிவுட்
    "நீ பெரும் கலைஞன்..நிரந்தர இளைஞன்": வைரலாகும் கமலின் புதிய வீடியோ இந்தியன் 2
    தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம் இந்தியன் 2
    "சேனாதிபதியின் சேனை": வைரலாகும் கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு இந்தியன் 2

    திரைப்பட வெளியீடு

    இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்  திரையரங்குகள்
    சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை! கோலிவுட்
    தடைகளை மீறி 37 நாடுகளில் வெளியாகப்போகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட அறிவிப்பு
    'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு  திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025