Page Loader
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

எழுதியவர் Sindhuja SM
Jan 26, 2024
04:03 pm

செய்தி முன்னோட்டம்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் காலமானார். அவர் கடந்த சில மாதங்களாக நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்த செய்தி வெளிவந்தவுடன், பல நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ட்விட்டரில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். ஏ.ஆர்.ரகுமான், வடிவேலு, சிலம்பரசன், அனிருத் ரவிச்சந்தர், சின்மயி ஸ்ரீபாதா மற்றும் பலர் பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ட்ஜ்வ்ல்

திரை பிரபலங்கள் இரங்கல்

பவதாரிணி ஜனவரி 25 அன்று மாலை 5 மணியளவில் இலங்கையில் இறந்தார். அவரது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. "அப்பாவித்தனம் மற்றும் அன்பினால் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் குரல்! நீங்கள் ஒரு தூய ஆத்மா! விரைவில் மறைந்துவிட்டீர்கள்! இளையராஜா சார் மற்றும் குடும்பத்திற்கு வலிமை கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். " என்று நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார். மேலும், அவர் தனது 'மாநாடு' படத்திலிருந்து 'மெஹெரெஸிலா' பாடலின் ஒரு பகுதியை பவதாரிணி பாடிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது போக, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகை சிம்ரன், தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.