அடுத்த செய்திக் கட்டுரை
மிஷன் சேப்டர் 1 படத்தில் ஏற்பட்ட விபத்து; அருண் விஜய் வெளியிட்ட புகைப்படங்கள்
எழுதியவர்
Venkatalakshmi V
Jan 22, 2024
08:30 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் அருண் விஜய், 'மிஷன் சேப்டர்-1' படத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது ஏற்பட்ட விபத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த படம் வெளியான போது, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கையிலும், காலிலும் பெரிய கட்டுடன் தோன்றினார் அருண் விஜய்.
எனினும் தனக்கு எப்போது அடிபட்டது என்பதை பற்றி அவர் கூறவில்லை.
இந்த நிலையில், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,"MissionChapter1 க்கு நீங்கள் கொடுத்த மாபெரும் வெற்றியானது, ஸ்டண்ட் செய்யும் போது பல எலும்பு முறிவுகள் மற்றும் தசைநார் கிழிந்ததால் கடந்த 2 மாதங்களாக நான் அனுபவித்த வலியை மறக்கச் செய்தது. விரைவில் தயாராகி மீண்டும் செயலில் இறங்க உங்கள் அன்பு என்னை மேலும் வலிமையாகியுள்ளது.அனைவர்க்கும் நன்றி" எனத்தெரிவித்துள்ளார்.