
பொங்கலுக்கு வெளியாகும் 'அரண்மனை 4' - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
'அரண்மனை' படத்தில் ஏற்கனவே 3 பாகங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் சுந்தர்.சி, தற்போது இதன் 4ம் பாகத்தினை எடுத்துள்ளார்.
இதில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், சம்பள பிரச்சனை காரணமாக அவர் இதிலிருந்து விலகி விட்டார்.
எனவே, இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சுந்தர்.சி தான் நடிக்கிறாராம்.
அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர், ஹிப்-ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வரும் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
'அரண்மனை 4'
#CinemaUpdate | சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'அரண்மனை 4' திரைப்படம், 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
— Sun News (@sunnewstamil) September 29, 2023
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!#SunNews | #Aranmanai4 | @khushsundar |… pic.twitter.com/9PknFxA6DZ