ஏ.ஆர்.ரஹ்மான் மீதான புகாருக்கும் அவருக்கும் தொடர்பில்லை - மேலாளர் அறிக்கை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக நேற்று(செப்.,27)தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த புகார் குறித்து தற்போது 'தி க்ரூப்' நிறுவன உரிமையாளரும், ஏஆர் ரஹ்மானின் மேலாளருமான செந்தில் வேலன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த வழக்கிற்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 2018ல் அந்த சங்கத்தினர் இசைநிகழ்ச்சிக்காக முன்பணமாக ரூ.29.50 லட்சத்தினை கொடுத்திருந்தனர்". "ஆனால் அதன்பின்னர் இசைநிகழ்ச்சிக்கான தொகை அதிகம் என்னும் காரணத்தினால் அவர்கள் அந்த நிகழ்ச்சியினை ரத்து செய்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், நிகழ்ச்சியினை ரத்து செய்தாலும் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது என்று அக்ரீமெண்ட்டில் உள்ளதாகவும், இந்த நிபந்தனை அனைத்துவித இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.