
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் அறிக்கைக்கு ஜாய் கிரிசில்டா பதில்
செய்தி முன்னோட்டம்
பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி மற்றும் கர்ப்பமாக்கியதாக புகார் அளித்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நேற்று இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுக இருப்பதாகவும், உண்மை நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு, நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனை குறித்து சமரசம் பேசி முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் துளியும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த அறிக்கை பதிவை டேக் செய்து ஜாய் கிரிசில்டா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பதிலடி
ஜாய் கிரிசில்டாவின் பதிலடி
மாதம்பட்டி ரங்கராஜின் இந்த சட்டரீதியான நிலைப்பாட்டிற்கு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரங்கராஜின் அறிக்கையை பகிர்ந்து ஒரு வரியில் சவால் விடுத்துள்ளார்: "ஹலோ ஹஸ்பாண்ட் #மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் நீங்க காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வாங்க. சட்டம் தன் கடமையை செய்யும்." என்று பதிவிட்டுள்ளார். மேலும், வேறொரு பதிவில், "சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று மகளிர் ஆணையத்திற்கு முன், ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் ஆஜர் ஆனார்கள். இதில் ரங்கராஜ் தன்னுடைய மனைவியுடன் வந்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.