Page Loader
நடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பிரபாஸை செல்லமாக குறிப்பிட்ட அனுஷ்கா

நடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா

எழுதியவர் Venkatalakshmi V
May 02, 2023
04:30 pm

செய்தி முன்னோட்டம்

பாகுபலி படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவருக்கு பரிச்சயம் ஆனவர் நடிகர் பிரபாஸ். அவரும், அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 40 வயதை கடந்தும், இருவரும் திருமணம் செய்யாமல் இருப்பது, இந்த கிசுகிசுக்களை மேலும் வலு சேர்த்தது. அதன் பின்னர், தற்போது இருவரும் பிரிந்து விட்டனர் என்றும், காதலில் விரிசல் விழுந்துவிட்டதென்றும் கூறப்பட்டது. சமீபத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர். பாலிஷெட்டி' என்ற படத்தின் டீஸரை வெளியிட்டார் பிரபாஸ். இதற்கு, நன்றி கூறிய அனுஷ்கா, அவரை 'பூப்சிசிசி' என செல்லமாக அழைத்திருந்தார். அதை பார்த்த இவர்களின் ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்,

ட்விட்டர் அஞ்சல்

பிரபாஸ் வெளியிட்ட டீஸர்