கிளாஸ்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்
நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது அறிந்ததே. ஐரோப்பாவில், அவர் தற்போது கிளாஸ்கோ நகரில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அங்கே உள்ள ரசிகர்கள், அவருடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கியுள்ளனர். இது குறித்து பதிவிட்டிருந்த அஜித்தின் ரசிகர் சூர்யா என்பவர், கிளாஸ்கோவில் உள்ள ஒரு காபிஷாப்பில் அஜித்தை சந்தித்ததாகவும், அவர் மிகவும் பணிவாகவும், இனிமையாகவும் தங்களிடம் பேசியதாக, ஒரு நீண்ட பதிவை இட்டுள்ளார். அஜித்தின் அடுத்த படமான 'AK 62' பற்றிய அறிவிப்பிற்க்காக காத்திருக்கும் இந்த நேரத்தில், இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து, ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.