
அதிதி ராவ் ஹைதாரி- சித்தார்த் திருமணம் எங்கே?எப்போது? வெளியான விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகை அதிதி ராவ் ஹைதரி, நடிகர் சித்தார்த்துடனான தனது நிச்சயதார்த்தத்தைப் பற்றி வோக் இந்தியாவிற்கான அவரது பிரத்யேக பேட்டியில், அவரது திருமணம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிதி, தனது வருங்கால கணவர் சித்தார்த் தனது இதயத்திற்கு நெருக்கமான இடமான, தனது மறைந்த பாட்டி நிறுவிய பள்ளியில் ப்ரொபோஸ் செய்ததையும் வெளிப்படுத்தினார்.
அதே பேட்டியில் அவர்களின் திருமணத்தின் இடத்தை பற்றியும் க்ளூ தந்துள்ளார்.
திருமணம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழிவு விவரங்கள்
அதிதியின் பாட்டியின் பள்ளியில் சித்தார்த்தின் ப்ரோபோசல்
சித்தார்த் எப்போதும் மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்வதை பற்றி பிராங்க் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிதி தெரிவித்தார்.
இருப்பினும், உண்மையான ப்ரோபோசல் நிகழ்வு ஆச்சரியமாக இருந்தது என்றார் அவர்.
"ஒரு நாள், நான் என் பாடியுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தேன் என்பதை நன்கு அறிந்த சித்தார்த், என்னிடம் (பாட்டி நிறுவிய பள்ளி) பார்க்க முடியுமா என்று கேட்டார்."
அங்கு சென்றதும் அவர் மண்டியிட்டுள்ளார்.
"நான் அவரிடம், 'இப்போது நீங்கள் எதை தொலைத்தீர்கள்? யாருடைய ஷூ லேஸ்கள் கலந்துள்ளது?" எனக்கேட்டேன்"
"உடனே அவர், 'அடு... நான் சொல்றதைக் கேளு' என்று சொல்லிக்கொண்டே ப்ரொபோஸ் செய்தார்" என சினிமா பணியில் நடந்த அழகிய ப்ரோபோசல் நிகழ்வை பகிர்ந்துகொண்டார்.
உறவு வரலாறு
அதிதி மற்றும் சித்தார்த்தின் முதல் சந்திப்பு மற்றும் நிச்சயதார்த்தம்
அதிதியும், சித்தார்த்தும் முதன்முதலில் 2021 இல் மகா சமுத்திரம் படப்பிடிப்பில் சந்தித்தனர்.
அவர்களின் முதல் உரையாடலை நினைவு கூர்ந்த அவர், "அவர் உள்ளே நுழைந்து, 'ஹலோ, பியூட்டிஃபுள் கேர்ள் ' என்று கூறினார். பொதுவாக, யாராவது இப்படிச் சொன்னால், அது வேலை செய்யாது, ஆனால் அவர் உண்மையானவராக இருந்தார்" என வெட்கபட்டுக்கொண்டே கூறினார் அதிதி.
"இறுதியில், அவர் என்னையும், படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவரது சமையல்காரரால் எனக்கும் எனது குழுவினருக்கும் நெய் இட்லிகள் வார்ப்பதையும் அவர் உறுதி செய்தார்."
திருமண திட்டங்கள்
400 ஆண்டுகள் பழமையான கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது
இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோடி விரைவில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதிதி அவர்களின் திருமணத்தின் சரியான தேதியை வெளியிடவில்லை என்றாலும், தெலுங்கானாவின் வனபர்த்தியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக வைத்து விழா நடைபெறும் என்றும், இது அவரது குடும்பத்திற்கு "முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
திருமண நிச்சயதார்த்தத்திற்கு வனபர்த்தி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலை இருவரும் தேர்வு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.