
தெலுங்கு படங்களை அதிகம் தேர்ந்தெடுப்பதன் காரணத்தை கூறிய நடிகை வரலக்ஷ்மி
செய்தி முன்னோட்டம்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது அதிகம் தெலுங்கு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். "தமிழில், நான் அறிமுகமான 'போடா போடி' 2012ல் வெளியானது. தெலுங்கில் நான் நடித்த 'கிராக்' படம் 2022ல் வெளியானது. அந்த ஒரே வருடத்தில் தெலுங்கில் கிடைத்த வரவேற்பு, தமிழில் எனக்கு கிடைக்கவில்லை. அங்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சம்பள விஷயத்தில் அவர்கள் பேரம் பேசுவதில்லை. திறமைக்கான மரியாதையைக் கொடுக்கிறார்கள். நான் இருந்தால் படம் வரவேற்பைப் பெறுவதாக நம்புகிறார்கள்," எனக்கூறியுள்ளார்.
தற்போது, அவர் தமிழில்,'கொன்றால் பாவம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம், மார்ச் 3-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அதிரடி பேட்டி
தெலுங்கில் திறமையை மதிக்கிறார்கள் - வரலட்சுமி சரத்குமார் மகிழ்ச்சி https://t.co/oDNikTMfY6 #Tollywood #varalakshmi
— Tamil The Hindu (@TamilTheHindu) February 14, 2023