அடுத்த செய்திக் கட்டுரை
நடிகை வனிதா மகன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!
எழுதியவர்
Siranjeevi
May 10, 2023
10:31 am
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் நடிகை வனிதா விஜயகுமார் 1995-ம் ஆண்டில் விஜய் நடிப்பில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனித விஜயகுமார் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து பிரிந்தார்.
இவர்களுக்கு ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளில் ஸ்ரீ ஹரி என்பவர் தாத்தா விஜயகுமாருடனும், ஜோவிகா என்ற மகள் வனிதாவுடனும் வளர்ப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நன்றாக வளர்ந்துவிட்ட ஸ்ரீ ஹரி அண்மையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் ஹீரோ போல் வளர்ந்துவிட்டாய் வனிதா மகன் என பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.