
நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1 வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா.
இவர் தனது 75வது படமான 'அன்னபூரணி' திரைப்படத்தினை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கிறார்.
'ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்' மற்றும் 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ரெடின் கிங்க்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், அச்யுத் குமார் போன்ற பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
சமையல் கலையை மூலமாக வைத்து காமெடி-எமோஷன்ஸ் உள்ளிட்ட கலவையாக எடுக்கப்படும் இப்படம் வரும் டிசம்பர் 1ம்.,தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரிலீஸ் தேதி
Lady Superstar #Nayanthara 's #Annapoorani is bringing you a feast and will see you in theatres worldwide on the 1st of December. pic.twitter.com/Jze7UROOU4
— Ramesh Bala (@rameshlaus) October 31, 2023