அடுத்த செய்திக் கட்டுரை

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா; முதல் பதிவாக மகன்களுடன் ரீல்ஸ்
எழுதியவர்
Venkatalakshmi V
Aug 31, 2023
12:46 pm
செய்தி முன்னோட்டம்
நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் எதிலும் ஆக்டிவாக இருந்ததில்லை. அவருக்கென்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த தளத்திலும் அக்கௌன்ட் வைத்து கொண்டதும் இல்லை.
தான் ஒரு பிரைவேட் பெர்சன் என்றும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் காட்ட விரும்பாதவர் என்றும் பேட்டிகளில் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் முதல்முதலாக நடிக்கும் பாலிவுட் படமான 'ஜவான்' திரைப்படம் இந்த மாதம் வெளியாவதை ஒட்டி, தனது கொள்கைகளை தளர்த்தி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கௌன்ட் ஓபன் செய்துள்ளார் நயன்.
முதல் பதிவாக, தனது மகன்களான உயிர் மற்றும் உலக் உடன் இருப்பது போன்ற ஒரு ரீலை பதிவேற்றியுள்ளார்.
ஜோதிகா, விஜய் போன்ற பிரபலங்களை தொடர்ந்து தற்போது நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.