நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் சினிமாவில் 'அழகிய தீயே', 'மாய கண்ணாடி' போன்ற படங்களில் நடித்தவர் மலையாள படவுலக நடிகை நவ்யா நாயர். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆவர். எதார்த்தமான நடிப்பிற்காக பல விருதுகளை அள்ளியவர் நவ்யா. இவர் சமீபத்தில், 'ஜானகி ஜானு' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக செல்லும் போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நவ்யா நாயர், (Food poisoning) ஃபூட் பாய்சனிங்கினால் பாதிக்கப்பட்டதாகவும், ஓரிரு நாட்களில் பட வேலைகளில் மீண்டும் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.