
என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன் - திருமணம் பற்றி பேசிய நடிகை ஹனி ரோஸ்
செய்தி முன்னோட்டம்
மலையாள சினிமா நடிகையான ஹனி ரோஸ் கோலிவுட் சினிமாவில் ஜீவா நடிப்பில் சிங்கம் புலி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
அதுவே மலையாள சினிமாவில் தனது 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகினார்.
அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் அண்மையில் வீரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னி நாயகியாகவே வலம் வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஹனி ரோஸ் தற்போது தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
நடிகை ஹனி ரோஸ்
திருமணம் வேண்டாம் என கூறிய நடிகை ஹனி ரோஸ் - காரணம் என்ன?
இதுகுறித்து பேசிய அவர், திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனவும், ஆனால் எனது வாழ்க்கையில் ஒரு துணையை விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும், திருமணத்திற்கு செல்வது எனக்கு பிரச்சினையாகவே உள்ளது. இதனால் யாருடனான திருமணத்துக்கும் செல்லமாட்டேன். அவர்களின் பார்வை என் மேல் விழும்.
தங்களிடம் பணம் உள்ளது என காட்டதான் திருமணம் செய்ய சொல்கிறார்கள். ஆனால் என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன்.
இதெல்லாம் பள்ளியில் படிக்கும் போதே நடந்துள்ளன. எனவே சிறுவயதில் இருந்தே எனக்கு திருமணம் செய்துகொள்ள ஆசையே இல்லை என தெரிவித்துள்ளார்.