LOADING...
நடிகை பிரிகிடா சாகா காதலர் இவரா? 'மீசையை முறுக்கு' பட நடிகரை கரம்பிடிக்கும் பவி டீச்சர்
தனது நீண்ட நாள் ரகசியக் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரிகிடா சாகா

நடிகை பிரிகிடா சாகா காதலர் இவரா? 'மீசையை முறுக்கு' பட நடிகரை கரம்பிடிக்கும் பவி டீச்சர்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 30, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூப் தளத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மெகா ஹிட்டான 'ஆஹா கல்யாணம்' வெப் சீரிஸில் 'பவி டீச்சர்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தவர் நடிகை பிரிகிடா சாகா. அந்த புகழைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரிகிடா, தற்பொழுது தனது நீண்ட நாள் ரகசியக் காதலை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். பிரிகிடாவின் மனதை கவர்ந்த அந்த நபர் வேறு யாருமில்லை; ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த 'மீசையை முறுக்கு' திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து பிரபலமான நடிகர் ஆனந்த் தான். இவரும் தற்பொழுது தமிழ் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பதிவு

"படங்களில் மட்டுமே காதல் என்று நினைத்தேன்": நெகிழ்ந்த பிரிகிடா

நடிகர் ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிகிடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டு இக்காதலை உறுதிப்படுத்தியுள்ளார். "சிறு வயதில் அழகான காதல் கதைகள் திரைப்படங்களில் மட்டுமே இருப்பதாக நம்பினேன். ஆனால், வாழ்க்கை எனக்கு வேறொரு அழகான நிஜக் கதையைப் பரிசளித்துள்ளது. எனது சினிமா பயணத்தில், அதே கனவையும் ஆர்வத்தையும் பகிர்ந்து கொண்ட ஒருவர் முதலில் எனக்குச் சிறந்த நண்பராக அறிமுகமானார். பின்னர் அவரே என் வாழ்க்கையின் காதலாக மாறினார். நிஜ வாழ்க்கையிலும் அழகான காதல் கதைகள் வாழப்படுகின்றன என்பதை இப்போது உணர்கிறேன்" என உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

ரகசியம்

"இதுவரை "I Love You" சொன்னதில்லை!"

தங்களது காதல் மலர்ந்த விதம் குறித்தும், தங்களுக்குள் இருக்கும் பிரத்தியேகப் புரிதல் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை அவர் அந்தப் பதிவில் பகிர்ந்துள்ளார். தாங்கள் இருவரும் இதுவரை ஒருமுறை கூட ஒருவருக்குக் கொருவர் "I Love You" என்று சொல்லிக் கொண்டதே இல்லை என்ற ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதற்குப் பதிலாக "LovveeSe" என்ற வார்த்தை மட்டுமே தங்களது காதலின் பிரிக்க முடியாத அடையாளமாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, "Happy Birthday, my person" என ஆனந்துக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement