Page Loader
பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா! 
மன உளைச்சலில் இருந்து மீண்டு வந்த நடிகை பாவனா

பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா! 

எழுதியவர் Arul Jothe
Jun 06, 2023
12:15 pm

செய்தி முன்னோட்டம்

2017 ல் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தென் இந்திய நடிகை பாவனாவின் வழக்கு விசாரணை இன்று வரை நடந்து வருகிறது. நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் தான் கடத்த சொன்னதாக பல தகவல்களும் வெளியாகிய வண்ணம் இருந்தது. மலையாள திரையுலகைச் சேர்ந்த தீலிப், நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் ஆவார். விவகாரத்து ஆன பிறகு தீலிப், காவியா மாதவனைத் திருமணம் செய்து கொண்டார். காவியா மாதவன், பாவனா, மஞ்சு வாரியர் நெருங்கிய நண்பர்கள் ஆவர். மஞ்சு வாரியருக்கு தெரியாமல் நடந்து வந்த இவர்களின் காதலை, நடிகை பாவனா மஞ்சு வாரியரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீலிப், அவரை ப்ளான் செய்து கடத்தியதாக செய்திகளும் வெளியானது.

Bhavana Harassment Case 

சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கிய நடிகை பாவனா 

"என் கண்ணியம் சுக்குநூறானது. எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். இருந்தும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.என் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க 7 வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகள் எல்லாத்திற்கும் பதில் கூறினேன்" என சமீபத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தார் நடிகை பாவனா. இதனிடையே மலையாள படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. பல போராட்டங்கள் மற்றும் இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடிக்க தொடங்கவுள்ளார் என்ற செய்தி வெளியானவுடன் அவருக்கு ஆதரவாக நடிகர் அஜித் முதல் அனைத்து திரையுலகினரும் ஊக்கம் அளிக்கும் வகையில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.